< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மின்கம்பத்தில் மோதிய டிராக்டர்
|12 July 2023 1:14 AM IST
மின்கம்பத்தின் மீது டிராக்டர் மோதியது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சொந்தமான டிராக்டரை அவரது மகன் முரளி(வயது 31) நேற்று மாலை ஆலத்துடையான்பட்டி மெயின் ரோடு வழியாக விவசாய பணிகளுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் உடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த எரகுடி உதவி மின்செயற்பொறியாளர் சிலம்பரசன், ஊழியர்களுடன் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்தார். மின்கம்பம் சேதமடைந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.