< Back
மாநில செய்திகள்
செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு
சென்னை
மாநில செய்திகள்

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
15 Jun 2023 2:28 PM IST

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

டிராக்டர் மோதல்

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் சோலையம்மன் தெருவை சேர்ந்தவர் டைட்டஸ் மைக்கேல். இவரது மகன் விக்ரம் (வயது 21). இவர் செங்குன்றத்தை அடுத்த பூச்சி அத்திப்பேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்ற நிலையில், காந்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விக்ரம் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்