< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
லண்டன் ஸ்கில் சிட்டி பல்கலைக்கழக கல்வி இயக்குனராக திருப்பத்தூரை சேர்ந்தவர் தேர்வு
|18 Jun 2023 11:42 AM IST
லண்டன் ஸ்கில் சிட்டி பல்கலைக்கழக கல்வி இயக்குனராக திருப்பத்தூரை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் அண்ணாமலையார் தெருவை சேர்ந்தவர் காகி அஸ்லம். இவரது மகன் முஹம்மத் சுபியான். இவர் திருப்பத்தூர் அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2008-2009-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,134 மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். தற்போது முஹம்மத் சுபியான் லண்டனில் உள்ள ஸ்கில் சிட்டி பல்கலைக்கழகத்தின் கல்வி இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் பள்ளிக்கும், திருப்பத்தூருக்கும் பெருமை தேடி தந்த அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பள்ளியின் தலைவர் சையத்ஷா ஹாமீத் ஹூசைனி மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.