< Back
மாநில செய்திகள்
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையுடன் டிப்-டாப் பெண் ஓட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையுடன் டிப்-டாப் பெண் ஓட்டம்

தினத்தந்தி
|
8 Jan 2023 2:52 PM IST

மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையுடன் டிப்-டாப் பெண் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லைலா (வயது 65). விதவையான இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது கிராமத்தில் உள்ள நூலக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று மாலை நூலகம் செல்ல அங்குள்ள ரோட்டில் ஓரம் பஸ்க்காக காத்திருந்தார்.

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க டிப் டாப் பெண்மணி மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அவர் மூதாட்டியிடம் நைசாக பேச்சு கொடுத்து எங்கு சொல்கிறீர்கள் என்று கேட்டார். தான் நூலகத்துக்கு செல்ல வேண்டும் என்று மூதாட்டி கூறினார். நானும் அந்த வழியாகத்தான் செல்கிறேன். மோட்டார் சைக்கிளில் ஏறி கொள்ளுங்கள் என்று கூறினார்.

சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அந்த பெண்மணி மூதாட்டியிடம் நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக உள்ளது. எனக்கு கொடுத்தால் அணிந்து கொண்டு போட்டோ எடுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார். இதை நம்பிய மூதாட்டி காதில் இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி ஆகியவற்றை அந்த பெண்மணியிடம் கொடுத்தார். இதை அணிந்த டிப்டாப் பெண்மணி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்து மூதாட்டி லைலா பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து மூதாட்டி இடம் நகைகளை பறித்து சென்ற டிப்-டாப் பெண்மணியை வலை வீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்