< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஐஸ்கிரீம் குடோனில் பயங்கர தீ விபத்து... ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஐஸ்பெட்டிகள் எரிந்து நாசம்
|23 Oct 2023 12:52 AM IST
ஓசூர் அருகே ஐஸ்கிரீம் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள ஐஸ்பெட்டிகள் எரிந்து சேதமாகின.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவலப்பள்ளி ஆட்டோ பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் குடோனில் இருந்த 15 ஃப்ரீசர் ஐஸ்பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.