< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காசிமேட்டில் விசைப்படகுகளின் உதிரி பாகங்களை கொட்டும் இடத்தில் பயங்கர தீ விபத்து
|28 April 2023 4:20 PM IST
வெயிலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு யாரேனும் தீ பற்ற வைத்தார்களா என விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை,
சென்னை காசிமேட்டில் விசைப்படகுகளின் உதிரி பாகங்களை கொட்டும் இடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விசைப்படகுகளின் உதிரி பாகங்களை கொட்டும் இடத்தில் வெயிலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு யாரேனும் தீ பற்ற வைத்தார்களா என விசாரணை நடைபெற்று வருகிறது.