செங்கல்பட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்
|பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குகிறது.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பஸ் நிலையம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மாநகர பஸ் நிலையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
இங்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இங்கு வந்து பஸ் ஏறி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களும் இங்கு நின்று செல்லும், இதனால் தற்காலிக பஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.