< Back
மாநில செய்திகள்
செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க  முயன்ற  வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி

தினத்தந்தி
|
7 Sept 2023 2:58 PM IST

பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுரை முர்மு (வயது 24). இவர், சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரை முர்மு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்