< Back
மாநில செய்திகள்
பொன்னேரி அருகே கிரிக்கெட் விளையாடிய வாலிபர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொன்னேரி அருகே கிரிக்கெட் விளையாடிய வாலிபர் பலி

தினத்தந்தி
|
18 Jan 2023 2:12 PM IST

பொன்னேரி அருகே கிரிக்கெட் விளையாடி கோண்டிருந்தய வாலிபர் பலியானார்.

பொன்னேரி அடுத்த ஆரணி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 35). இவர் பொங்கல் திருநாளை யொட்டி சக நண்பர்களுடன் பெரும்பேடு பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார். மைதானத்தில் மனோஜ்குமார் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மூச்சுவிட சிரமமாக உள்ளது என்று சக நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் மனோஜ்குமாரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மனோஜ்குமாரின் தாய் சரஸ்வதி பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோஜ்குமார் சாவுக்கன காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்