< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
|22 Jun 2023 12:51 AM IST
கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிக்கினார்.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்ஆழ்வார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லிடைக்குறிச்சி பொன்மா நகர் காலனி அருகே சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த செல்வகுமார் (வயது 19) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.