< Back
மாநில செய்திகள்
காரின் பம்பரில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர் சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

காரின் பம்பரில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர் சாவு

தினத்தந்தி
|
18 Sep 2023 6:45 PM GMT

மோட்டார் சைக்கிள் விபத்தில் விழுந்த வாலிபர், காரின் பம்பரில் சிக்கி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கீழக்கரை

மோட்டார் சைக்கிள் விபத்தில் கீேழ விழுந்த வாலிபர், காரின் பம்பரில் சிக்கி சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ேமாட்டார்சைக்கிள்கள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சம்சுதீன் (வயது 32) மற்றும் சூரிய பிரகாஷ் (19) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தை நோக்கி வந்தனர்.

இதே போல் கிழக்குக் கடற்கரை சாலையை நோக்கி மருதன்தோப்பை சேர்ந்த பாண்டி (54), அவருடைய மனைவி ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

முனீசுவரன் கோவில் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மேற்கண்ட 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த கார், கீழக்கரை சம்சுதீன் மீது மோதியது. இதில் கார் முன்புறம் உள்ள பம்பரில் சம்சுதீன் சிக்கி கொண்டதாக தெரிகிறது. இதனை கவனிக்காத கார் டிரைவர் ஹமீது அலி(62), காரை தொடர்ந்து இயக்கியுள்ளார்.

இழுத்து செல்லப்பட்டார்

இதனால் காரில் சிக்கிய சம்சுதீன், கீழக்கரை-ஏர்வாடி முக்கு ரோடு வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதாக தெரிகிறது. சாலையில் சென்றவர்கள் இதை கவனித்து, காரை நிறுத்தும்படி கூச்சலிட்ட பிறகே டிரைவர் ஹமீது அலி கவனித்து நிறுத்தியதாக தெரியவருகிறது.

பம்பரில் சிக்கி படுகாயம் அடைந்த சம்சுதீனை கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சம்சுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் ஹமீது அலி மற்றும் பாண்டி மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்