< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு சாவு
|21 March 2023 12:13 AM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
நெமிலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்தி (வயது 26). இவர் நேற்று இரவு வேலை முடிந்ததும் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சேந்தமங்கலம் பகுதியில் ெரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக நாகர்கோவிலிலிருந்து மும்பை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த ெரயில்வே போலீசார் அங்கு வந்து கார்த்தியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்தியின் உடலை பார்த்து குடும்பத்தினரும் உறவினர்களும் அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.