< Back
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
20 April 2023 12:15 AM IST

10-ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வலங்கைமான் பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் தனது மகளை காணவில்லை என மாணவியின் தந்தை வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இந்தநிலையில் நீடாமங்கலம் அருகே பதுங்கி இருந்த அந்த மாணவியையும், வேப்பதாங்குடி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பிச்சை மகன் வெங்கட் (வயது20) என்பவரையும் வலங்கைமான் போலீசார் பிடித்து வலங்கைமான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 10-வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வெங்கட் அழைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் வெங்கட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்