< Back
மாநில செய்திகள்
பஸ் மீது கல்வீசிய வாலிபர் ெசன்னையில் சிக்கினார்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பஸ் மீது கல்வீசிய வாலிபர் ெசன்னையில் சிக்கினார்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:15 AM IST

ராமநாதபுரத்தில் பஸ் மீது கல்வீசிய வாலிபர் ெசன்னையில் சிக்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து ஏர்வாடி நோக்கி அரசு பஸ் வந்தது. இந்த பஸ் ஏர்வாடியில் இருந்து திரும்பி வந்தபோது ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர் கரூர் பரமத்தி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (35) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கல் வீசிய வாலிபர் ராமநாதபுரம் வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் தயாநிதி (23) என்பது தெரியவந்தது. அவர் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று தயாநிதியை கைது செய்து ராமநாதபுரம் கோட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்