< Back
மாநில செய்திகள்
கத்தியை காட்டி தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கத்தியை காட்டி தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2023 12:30 AM IST

கத்தியை காட்டி தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). தொழிலாளியான இவர் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிங்கிகுளத்தை சேர்ந்த முத்துபாலன் (28) என்பவர் முருகனிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதையடுத்து முத்துபாலன், கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் ரூ.120-ஐ எடுத்து கொடுத்தார். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, முத்துபாலனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்