தேனி
ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர் கைது
|தேனி அருகே ஜவுளிக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே ஜவுளிக்கடை வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு 2 வாலிபர்கள் இந்த கடையின் பின்பக்கம் உள்ள தகரத்தை பிரித்து உள்ளே புகுந்தனர். கடையில் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை திருடி கொண்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது இதை கவனித்த கடையின் காவலாளி அவர்களை துரத்தினார். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
மற்றொருவரை அவர் பிடித்து பிரபுவுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பிரபு அங்கு வந்து பிடிபட்ட வாலிபரை பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்றும், தப்பி ஓடியது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (28) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். பிரகாசை தேடி வருகின்றனர்.