< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
|8 Sept 2023 3:12 PM IST
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த 10 நாட்களில் 7 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் சிவா, ஜான்சன் ஆகியோர் கொலை வழக்கு குற்றவாளிகளும் இடம் பெற்றுள்ளனர். கொடுங்கையூரில் கோபி என்பவரை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதானவர்கள்.
இதேபோல பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நவீன்குமாரும் இந்த பட்டியலில் உள்ளார். இவர் 17 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து, கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர் ஆவார். பாலமுருகன், ஜஸ்பீர்சிங் ஆனந்த், குள்ள மகேஷ், சுந்தர் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளனர்.