< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
|6 Oct 2023 6:36 PM IST
கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு, ஸ்ட்ராகன்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் 2019-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 24) என்பவரை சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சி.திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரவிந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.