< Back
மாநில செய்திகள்
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
25 March 2023 2:15 PM IST

பெருங்களத்தூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 23), டிரைவராக பணியாற்றி வரும் இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு சுற்றித்திரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியிடம் நட்பு முறையில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து அதன்பிறகு தொடர்ந்து அந்த சிறுமியை மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

பிரதாப் வீட்டுக்கு அடிக்கடி சிறுமி சென்று வருவதும் சிறுமி சரிவர சாப்பிடாமல் எப்போதும் சோகமாகவே இருப்பதையும் கண்டு சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் என்ன பிரச்சினை என கேட்டுள்ளனர். சிறுமி விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே சிறுமியின் பெற்றோர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் பிரதாப்பை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்