< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பட்டுக்கோட்டை: போலீசாரை பார்த்து தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து காயம்
|19 July 2022 10:13 AM IST
பட்டுக்கோட்டை அருகே போலீசாரை பார்த்து தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் வீரனார் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த 5 நபர்கள் வந்துள்ளனர். அவர்களை சிலர் அரிவாளால் வெட்டியதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து விசாரிக்க ராஜதுரை என்பவரை போலீசார் அழைக்க சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடினார். அப்போது தவறி விழுந்ததில் ராஜதுரை காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.