< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
|27 Sept 2023 2:05 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
காரியாபட்டி,
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 35). இவர் நரிக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனம் சார்பாக நடைபெற்று வரும் கேபிள் பதிக்கும் பணிக்காக நரிக்குடி பெட்ரோல் பல்க் பகுதியை அடுத்துள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கட்டிடத்தின் மொட்டை மாடி பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென சண்முகசுந்தரம் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.