கன்னியாகுமரி
மதுபோதையில் கார் ஓட்டிய வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
|இரணியலில் மதுபோதையில் கார் ஓட்டிய வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திங்கள்சந்தை:
இரணியலில் மதுபோதையில் கார் ஓட்டிய வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரணியல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அரியலூர் மாவட்டத்தின் பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று நெருக்கடி மிகுந்த சாலையில் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட போலீசார் உடனே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரை ஓட்டி வந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இர்வின்பால் (வயது 25) என்பதும், மூலச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தனது உறவினர் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவரை பார்க்க வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இர்வின்பால் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.