< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தகராறை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
|27 April 2023 12:15 AM IST
தகராறை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள ராமையன்பாளையத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் விக்னேஷ்குமாரும் (20), அவரது தாய் உஷாவும் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் சத்தமாக பேசி திட்டிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இளையராஜாவின் சித்தப்பாவான தெய்வசிகாமணி (35) என்பவர் அங்கு சென்று ஏன் இவ்வளவு சத்தமாக பேசி தகராறு செய்கிறீர்கள் என்றும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ்குமார், தெய்வசிகாமணியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து இளையராஜா, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விக்னேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.