< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பில் வாலிபருக்கு கத்திக்குத்து
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பில் வாலிபருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
11 May 2023 10:55 AM IST

புளியந்தோப்பில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவரை, நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (26) என்பவர் கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த விஜய், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுபற்றி பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலா என்பவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு காரணம் சரத்குமார் என்று நினைத்த கலாவின் மகனான விஜய், இது குறித்து சரத்குமாரிடம் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரத்குமார் தன்னிடம் இருந்து சிறிய கத்தியால் விஜயை குத்தியது தெரிந்தது. சரத்குமாைர போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்