< Back
மாநில செய்திகள்
முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
விழுப்புரம்
மாநில செய்திகள்

முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
4 Sep 2022 7:12 PM GMT

விக்கிரவாண்டியில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி கக்கன் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 33).இவருக்கும் விக்கிரவாண்டி வாணியர் வீதியைசேர்ந்த வரதராஜன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் புகழேந்தி கடைவீதியில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வரதராஜனுக்கும் புகழேந்திக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வரதராஜன், கத்தியால் புகழேந்தியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வரதராஜன் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்