< Back
மாநில செய்திகள்
மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு

தினத்தந்தி
|
18 March 2023 2:03 PM IST

திருவாலங்காடு அருகே மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகில் அஹமத் (வயது 25). இவர் திருவெற்றியூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்து நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்க நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் திருவாலங்காடு அருகே உள்ள நாம்மநேரி என்ற இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஷகீல் அஹமத் மது அருந்தி உள்ளனர். மது போதையில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

அப்போது அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷகீல் அஹமத்தை கை மற்றும் கால்களில் அவரது நண்பர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் ஷகீல் அஹமத்திற்கு பலத்த காயம் அடைந்தார். அப்போது ரத்த காயங்களுடன் இருந்த ஷகில் அஹமதை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்