< Back
மாநில செய்திகள்
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் படுகாயம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் படுகாயம்

தினத்தந்தி
|
17 Oct 2023 6:03 PM IST

திருமுல்லைவாயல் அருகே தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 23). டிரைவரான இவர், தன்னுடைய நண்பர் ராஜேஷ் (24) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் நோக்கி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மேம்பாலத்தில் இருந்து மதுரவாயலுக்கு இறங்கும்போது திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த பிரசாந்த், சுமார் 30 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜேசுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்