< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
லாரி மோதி வாலிபர் பலி
|13 July 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே நரிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 27). இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அதே ஊரில் உள்ள மெயின் ரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று சேட்டு் மீது மோதியது. இந்த விபத்தில் சேட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் மற்றும் அந்தோணி குரூஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.