< Back
மாநில செய்திகள்
இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு; அண்ணன் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு; அண்ணன் கைது

தினத்தந்தி
|
8 Sept 2023 7:23 PM IST

தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரஜினி (வயது 44). இவரது தம்பி வினாயகம் (35). லாரி டிரைவர். அண்ணன்- தம்பிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டால் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அத்திரமடைந்த அண்ணன் ரஜினி தம்பியை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் தம்பி வினாயகத்துக்கு மண்டை உடைந்தது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்த அண்ணன் ரஜினியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்