< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
19 Jun 2023 2:54 PM IST

திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெட்டிக்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சின்ன இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26). இவருடைய 3 சகோதரிகளுக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருநாவுக்கரசு தினந்தோறும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து தண்டரை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கிருந்து கம்பெனி பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று முன்தினம் மதியம் தண்டரை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து மீண்டும் நள்ளிரவில் பஸ்சில் இருந்து இறங்கி தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார்.

கிராம நிர்வாக அலுவலகம் அருகே திருநாவுகரசு வந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கை, கால் மற்றும் தலையில் வெட்டியுள்ளனர். இதில் திருநாவுகரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் திருநாவுக்கரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் திருநாவுக்கரசு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார் அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணுக்கு போன் செய்வது, வீடியகாலில் பேசுவது என தொடந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தம்பி மணிகண்டன் இது குறித்து தனது சகோதரி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரை கண்டித்துள்ளார். இதை பொருட்படுத்தாத திருநாவுக்கரசு மீண்டும் அந்த பெண்ணிடம் வீடியோ கால் செய்வது மற்றும் போனில் பேசுவது என தொடர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அவரது நண்பரான திருக்கழுக்குன்றம் அடுத்த மலையாநத்தம் பகுதியை சேர்ந்த குமார்(28) இருவரும் திருநாவுக்கரைச வெட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதில் திருநாவுக்கரசு இறந்தார்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்