< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் வாலிபர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
24 Aug 2023 8:51 PM IST

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக உருட்டு கட்டையால் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, பிரசாந்த் ஆகியோர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பவுன்ராஜ் அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்த போது சுந்தரமூர்த்தி மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் பவுன்ராஜை வழிமறித்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த பவுன்ராஜ் சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவுன்ராஜ் தாயார் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்