< Back
மாநில செய்திகள்
நீலாங்கரையில் வாலிபரை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு
சென்னை
மாநில செய்திகள்

நீலாங்கரையில் வாலிபரை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 2:05 PM IST

நீலாங்கரையில் வாலிபரை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தங்கச் சங்கிலியுடன் தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 30). இவர், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்து உள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் அக்கரையில் உள்ள கடை அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சில நபர்கள் கடையில் பொருட்கள் வாங்கினர். அப்ேபாது அவர்களுக்கும், கவுதம்ராஜ் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் வந்த நபர்கள் கவுதம்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதுடன், கவுதம்ராஜ் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக திரிசூலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா (23), ரமேஷ் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கச் சங்கிலியுடன் தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்