< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே மடிக்கணினி, செல்போன் திருடிய வாலிபர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே மடிக்கணினி, செல்போன் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 Aug 2023 2:46 PM IST

கூடுவாஞ்சேரி அருகே மடிக்கணினி, செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நிதிஷ் குமார் (வயது 20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தங்கியிருந்த அறை கதவை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது அவரது அறையில் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து நிதிஷ்குமார் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று அறையில் தங்கியிருந்த சக கல்லூரி மாணவர்களிடம் விசாரித்தனர். பின்னர் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் கூல்டிரிங்ஸ் பாட்டில், ஹெல்மெட் போன்றவற்றை கையில் வைத்துக் கொண்டு வரும் ஒரு வாலிபர் திறந்திருந்த அறைக்குள் புகுந்து அங்கிருந்து மடிக்கணினி, செல்போன் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஹெல்மெட் அணிந்தபடியே வெளியே வரும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன செல்போனின் சிக்னல் டவரை வைத்து தனிப்படை போலீசார் மடிக்கணினி மற்றும் செல்போனை திருடிய வழக்கில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நெல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகன் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மடிக்கணினி, செல்போன் போன்றவற்றை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்