< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
காரில் புகையிலை கடத்திய வாலிபர் கைது
|19 Jun 2023 12:30 AM IST
காரில் புகையிலை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் நேற்று உவரி-இடையன்குடி ரோடு ஆனைகுடி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ எடையுள்ள 467 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காரை ஓட்டிவந்த திசையன்விளை குருகாபுரம் மேலத்தெருவை சேர்ந்த நாமத்துரை மகன் முத்துகிருஷ்ணன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் உவரி, நவ்வலடி பகுதியில் உள்ள சில்லறை கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் புகையிலை பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.