< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Sept 2023 12:45 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னநத்தம் கிராமத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சின்னநத்தம் கிராமத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த யுவராஜ் (வயது 21) என்பவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் இருந்து 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் யுவராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்