< Back
மாநில செய்திகள்
குடிக்க பணம் தராததால் ஆத்திரம் நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்
சென்னை
மாநில செய்திகள்

குடிக்க பணம் தராததால் ஆத்திரம் நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்

தினத்தந்தி
|
31 Aug 2023 12:41 PM IST

குடிக்க பணம் தராததால் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அமர்ந்து சதீஷ்குமார் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் அவருடைய நண்பரான திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் அங்கு வந்து சதீஷ்குமாரிடம் மது குடிக்க பணம் தரும்படி கேட்டார். அதற்கு சதீஷ்குமார் பணம் தர மறுத்தார். இதனால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பர் சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

உடனே அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்