< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
11 Jun 2023 2:30 PM IST

மீஞ்சூர் அருகே பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் வருப்பவர் முத்து (வயது 45). இவரது மகன் மணிகண்டன் (19). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மணிகண்டன் மது குடித்து விட்டு வீட்டில் இருந்த பொற்றொர், சகோதரரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குள் சென்றார். இதையடுத்து பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு அறையில் உள்ள இரும்பு கம்பியில் புடவையால் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மணிகண்டனின் வீட்டாருக்கும், மீஞ்சூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயமுத்துக்குமார், சைமன்துரை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்