< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|7 Aug 2022 10:59 AM IST
சென்னை மேடவாக்கத்தில் குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த மேடவாக்கம் சிவகாமி நகர் நாயகம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை, பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த ராஜேஷ், படுக்கை அறைக்கு சென்று தான் அணிந்திருந்த வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.