< Back
மாநில செய்திகள்
ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

திருமருகல் அருகே மீன்பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

திட்டச்சேரி:

மீன்பிடிக்க சென்றார்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி துண்டம்பாலூர் திருக்குளத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் ராஜேந்திரன்(வயது33). இவர் சென்னை எண்ணூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் காலை மஞ்சள் காமாலை நோய்க்கு நாட்டு மருந்து சாப்பிட்ட ராஜேந்திரன் அருகில் உள்ள முடிகொண்டான் ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

ஆற்றில் மூழ்கி சாவு

இதனால் அவரது குடும்பத்தினர் ஆற்றங்கரைக்கு சென்றனர். அப்போது ஆற்றங்கரையில் துண்டில் மற்றும் ராஜேந்திரனின் செருப்பு மட்டும் கிடந்தது. உடனே சந்தேகம் அடைந்த கிராம மக்கள் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கி ராேஜந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது.

அவரது உடலை மக்கள் ஆற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்