< Back
மாநில செய்திகள்
குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
27 April 2023 12:59 PM IST

குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மாயம்

கர்நாடக மாநிலம் சித்ததுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது மகன் மாருதி (வயது 31). மினிலாரியில் கிளீனராக வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும்போது காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட் பகுதியில் மினிலாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கக்கருமூர்த்தி என்பவருடன் சேர்ந்து டிபன் சாப்பிட்டார்.

பின்னர் இருவரும் மதுகுடித்து விட்டு சிறிது நேரம் அங்கே ஓய்வெடுத்துள்ளனர். டிரைவர் கக்கருமூர்த்தி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வெளியே சென்ற மாருதி திரும்பி வர வில்லை. மாயமானார். ஓசூர் அருகே செல்லும்போது மாருதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக மாநிலம் ஓசுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆண் பிணம்

காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி பின்புறம் உள்ள குட்டையில் ஆண் பிணம் மிதப்பதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் மாருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாருதி குடும்பத்திற்கு தகவல் அளித்ததன்பேரில் மாருதியின் அண்ணன் மயிலரப்பா அளித்த புகாரின்பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்