< Back
மாநில செய்திகள்
சேலையூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
சென்னை
மாநில செய்திகள்

சேலையூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
8 Nov 2022 2:28 PM IST

சேலையூர் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்-அகரம்தென் பிரதமர் சாலையில் பதுவஞ்சேரி பகுதியில் உள்ள மாடம்பாக்கம் ஏரியில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக சேலையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏரியில் பிணமாக கிடந்தவர் பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்த ஜான் (வயது 35) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இவர் வேலை இல்லாத நேரங்களில் மது அருந்திவிட்டு ஏரியில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. எனவே அவர் மது போதையில் மீன்பிடிக்க சென்றபோது ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்