< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

21 Sept 2023 9:16 AM IST
பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 47-வது தெருவை சேர்ந்தவர் பரத் (வயது 21). இவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பரத் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.