< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திருச்சி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தினத்தந்தி
|
14 Dec 2022 1:19 AM IST

துறையூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுதாகர் (வயது 21). இவர் தனது நண்பர் சூர்யாவுடன் மோட்டார் சைக்கிளில் பச்சைமலை செல்லும் சாலையில் சென்றார்.

அப்போது, அங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நின்ற சரக்கு ஆட்டோவில் எதிர்பாராதவிதமாக மோதினர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சூர்யா ஆபத்தான நிலையில் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்