< Back
மாநில செய்திகள்
ஓடும் ரெயில் முன் பாய்ந்து உடல் துண்டாகி வாலிபர் சாவு
சேலம்
மாநில செய்திகள்

ஓடும் ரெயில் முன் பாய்ந்து உடல் துண்டாகி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
22 July 2023 1:15 AM IST

சேலம் ஜங்ஷனில் ரெயில் முன் பாய்ந்து உடல் துண்டாகி வாலிபர் இறந்தார்.

சூரமங்கலம்:-

சேலம் ஜங்ஷனில் ஓடும் ரெயில் முன் பாய்ந்து உடல் துண்டாகி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஜங்ஷன் ரெயில் நிலையம்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் காத்திருப்பு அறை உள்ளது. இந்த காத்திருப்பு அறையின் அருகில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தபடி இருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்தது. சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட்டது.

அப்போது 4-வது பிளாட்பாரத்தில் சுற்றி திரிந்த அந்த வாலிபர் திடீரென ஓடி வந்து ரெயிலின் குறுக்கே தண்டவாளத்தில் படுத்து கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அதற்குள் ரெயில் அந்த வாலிபர் மீது ஏறி இறங்கியது. இதில் வாலிபர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்