< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி வாலிபர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

ரெயில் மோதி வாலிபர் சாவு

திங்கள்சந்தை:

இரணியல் அருகே வடக்குபேயன்குழி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இதை பார்த்தவர்கள் நாகர்கோவில்

ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் வடக்குபேயன்குழி பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜேஷ் (வயது26), முடிவெட்டும் தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் நேற்று காலை வழக்கம் போல் காலைக்கடனை முடித்து விட்டு குளிக்க ரெயில் தண்டவாளம் வழியாக நடந்து சென்ற போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரெயில் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாகமாக இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்