< Back
மாநில செய்திகள்
மரத்தின் மீது கார் மோதி வாலிபர் பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மரத்தின் மீது கார் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
22 Jun 2023 12:10 AM IST

திமிரி அருகே மரத்தின் மீது கார்மோதி வாலிபர் பலியானார். ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.

காரில் சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பட்டன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 26), திமிரியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது நண்பர் திமிரி அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார். ராணுவ வீரரான இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பிரசாந்தை பார்ப்பதற்காக ஜெயக்குமார் திமிரிக்கு வந்துள்ளார்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் திமிரியில் இருந்து கலவை செல்லும் சாலையில் பிரசாந்்திற்கு சொந்தமான காரில் செனறனர். காரை ஜெயக்குமார் ஓட்டி சென்றுள்ளனர்.

மரத்தில் மோதி வாலிபர் பலி

கீழ்ப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பிரசாந்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

அதைத்தொடர்ந்து அவரது உடலை திமிரு போலீசார், ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஜெயக்குமார் ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்