< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விபத்தில் வாலிபர் பலி
|22 Oct 2023 12:15 AM IST
விபத்தில் வாலிபர் பலியானார்.
செஞ்சி,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் அரிச்சந்திரன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சி கோட்டை அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட தில் சம்பவ இடத்திலேயே அரிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.