விருதுநகர்
சிவகாசியில் விபத்தில் வாலிபர் பலி
|சிவகாசியில் விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ மகன் வருண்குமார் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லியநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபி மகன் சரவணன் (27), பாலமுருகன் (35) ஆகியோர் வந்துள்ளனர். இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வருண்குமாரை டாக்டர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் வரும் வழியில் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.