< Back
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
சாலை விபத்தில் வாலிபா் பலி

25 April 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் வாலிபா் பலியானார்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் அசோகன் (வயது 35). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை சென்று விட்டு, செம்மணங்கூருக்கு வந்து கொண்டிருந்தார்.
தடிகாரன் கோவில் அருகே வந்த போது அசோகனின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.