கன்னியாகுமரி
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து வாலிபர் பலி
|குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
குளச்சல்:
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
இறைச்சி கடை ஊழியர்
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அபீஸ் (வயது18). திங்கள்சந்தையில் ஒரு இறைச்்சி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும் பெத்தேல்புரத்தை சேர்ந்த அந்தோணி மகன் ஜோயல் (19) என்பவரும் நண்பர்கள்.
நேற்று மதியம் ஜோயல் செம்பொன்விளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேற்கு நெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அபீஸ் அமர்ந்திருந்தார்.
ஓடையில் பாய்ந்தது
அவர்கள் வர்த்தான்விளை மீன்கடை பக்கம் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர உள்ள ஓடையில் பாய்ந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அருகில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அபீஸ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ஜோயல் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.